துணி துவைத்து, கெஞ்சி ‘கொரளி’ வித்தை காட்டி ஓட்டு கேட்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்!

 



ஆட்சியில் இருந்த பத்தாண்டு காலத்தில் மக்களுக்கு நன்மை செய்யாத அ.தி.மு.க அமைச்சர்கள் தேர்தல் நேரத்தில் மக்களிடம் குரளி வித்தை காட்டி வாக்கு சேகரித்து வருவது கடுமையாக கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

பல்வேறு தொகுதிகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவர்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அ.தி.மு.க வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் தோல்வி பயத்தால், பிற பகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் சொந்த தொகுதிகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால், அமைச்சர்களை நம்பி களத்தில் இறங்கிய அ.தி.மு.க வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும் துவண்டுபோயுள்ளனர்.

கடைசி கட்ட முயற்சியாக மக்களிடம் கெஞ்சி ஓட்டுக் கேட்கும் நிலைக்குச் சென்றுள்ளனர் அ.தி.மு.க அமைச்சர்கள். ஆனால், மக்கள் என்னவோ அவர்களை குரளி வித்தை காட்டுபவர்களாகத்தான் கருதுகிறார்கள்.

திருமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், விவசாயிகள்,கூலித் தொழிலாளர்கள் காலில் விழுந்து வாக்கு கேட்டு வருகிறார்.

விவசாயிகளிடம் சென்று வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆர்.பி.உதயகுமார், விவசாயிகளுடன் சேர்ந்து துவரைக் கதிர்களை அடித்தும், கட்டிடப் பணியாளர்களுடன் பணி செய்தும் ஓட்டுக் கேட்டார்.

ஆட்சியில் இருந்த காலத்தில் எல்லாம் விவசாயிகளை கண்டுகொள்ளாமல், விவசாய விரோத வேளாண் சட்டங்களை ஆதரித்து துரோகமிழைத்துவிட்டு தேர்தல் நேரத்தில் குலைந்தால் மட்டும் வாக்களித்துவிடுவோமா என விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேபோல, விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர், “உங்களுக்காகவே ஓடா தேஞ்சு உழைச்சுக்கிட்டு இருக்கேன். எனக்கும் சுகர் இருக்கு பி.பி. இருக்கு. இருந்தாலும் இயேசு சிலுவையை சுமந்தது போல இந்த விராலிமலையை நான் சுமக்கிறேன்” மக்களிடம் கண்ணீர் ததும்ப கெஞ்சி வருகிறார்.

அதேபோல, நாகை அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன், துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்களிடம் சென்று துணியை துவைத்துக்கொடுத்து வாக்கு கேட்டார்.

அப்பகுதியிலிருந்த பெண்களோ, நீங்க தேர்தல் நேரத்தில் என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க; ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் ஆளையே பிடிக்க முடியாது என புலம்பியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!