அதிமுக கூட்டணி வெற்றி பெறாது; நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை; வைகோ பேச்சு..

 தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஈ.ராஜாவை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என்றும், நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை எனவும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால்,மோடி அரசு அதை கண்டு கொள்ளவில்லை. இந்த திட்டத்தை தமிழக முதல்வரும் எதிர்க்கவில்லை. இந்த அரசு அகற்றப்பட்டு விடும்.

ஓரிடத்தில் கூட அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. நாட்டில் படித்த இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். நீட் தேர்வால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் 13 பேர் தற்கொலை செய்துள்ளனர். 

ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறை தலைமை போலீஸ் அதிகாரியே இன்னொரு பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற செய்தியும் வந்தது. நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றுவார். நல்லாட்சியை தருவார். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சங்கரன்கோவில், கடையநல்லூர், சுரண்டை பகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பேசினார்.

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image