ராஜேந்திர பாலாஜியை விளாசிய ராஜவர்மன்“நாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க..”

 


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தேர்தல் பிரச்சார பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

விருதுநகர், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அமமுக டி.டி.வி.தினகரனை சந்தித்து, அக்கட்சியில் இணைந்த சிலமணி நேரங்களிலேயே சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று (23.03.2021) தனது தொகுதியான சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காவல்துறை அதிகாரிகளையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள். நீங்க எங்கெங்கே பணம் வைத்திருக்கிறீர்கள் என எங்களுக்குத் தெரியும். நீங்கள் கோடிக்கணக்கான ரூபாயை ராஜபாளையத்தில் புரளவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க” என்று பேசி வாக்கு சேகரித்தார்.  

Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image