காசு கொடுத்து ஓட்டா?;கழுதை கூட வாக்களிக்காது- நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்..

 


காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் வீட்டு கழுதை கூட ஓட்டுப்போடாது என்ற வாசகத்தை எழுதி கழுதையின் முகத்தில் கட்டிவிட்டு மலைக்கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியின் ஒரு பகுதியான ஊரடி, ஊத்துக்காடு, குறவன் குழலி, கருங்கல் பாறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதியை இதுவரை எந்த அரசாங்கமும் செய்து தரவில்லை. இதனால் இன்று மலைகிராம மக்கள் ஒன்றாக திரண்டு வந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை பகுதியில் தங்களின் ரேஷன் கார்டுகளை சாலையில் போட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தங்கள் தொகுதியில் வேட்பாளராக வெற்றி பெற்ற தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், சாலை வசதியை செய்து தருவதாக வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்த நிலையில் இன்று வரை சாலை வசதி இல்லாததால் அரசு வழங்கும் இலவச ரேஷன் அரிசியை கூட 500 ரூபாய் செலவு செய்து தங்கள் இல்லங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளதாக கூறினர். 

தொடர்ந்து சாலை வசதியின்றி பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகக் கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் அங்கு விளைவிக்கும் விளை பொருட்களை சுமந்துவரும் கோவேரி கழுதையில்,‘காசு கொடுத்து ஓட்டு வாங்க நினைத்தால் எங்கள் கழுதை கூட ஓட்டுப்போடாதது' என்ற வாசகத்தை எழுதி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image