இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மறைமுக வேலைகளில் அதிமுக அரசு.. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தங்கமணி?

 


ஊழல் பழனிசாமியின் ஆட்சியில் மின்சார ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைக் கேள்விப்படும் போது ஷாக் ஆக இல்லை. பழனிசாமி வகையறா செய்யும் தொழில் ஊழல் தான்! ஊழல் மட்டும் தானே!

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தற்போதுள்ள அமைச்சர்தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்துள்ளது. அந்த அறிக்கையைபடிக்கும் போது தமிழகம் எத்தகைய நிதி மூலதனச் சுரண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்! தனியாரிடம் இருந்து 2013 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை2,830 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட காலத்துக்கு கொள்முதல் செய்யதமிழக மின்வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களால் சந்தையில் கிடைக்கும் விலையைவிட 2 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகின்றனர். இதனால், தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 15ஆண்டுகளில் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்பு மட்டும் ரூ. 1 லட்சம் கோடி என்றுஅறப்போர் இயக்கம் சொல்கிறது. இதில் ஏற்கனவே ரூ. 54 ஆயிரம் கோடியை இழந்து விட்டோம்.

பெரும்பாலான நிறுவனங்களால் 5 மாதத்திற்குள் மின்சாரம் தர இயலவில்லை. கிட்டத்தட்ட2 வருடங்கள் அவர்கள் மின்சாரம் தரவில்லை. அப்படி இருந்தும் ஒப்பந்தங்களைரத்துசெய்யாமல் கொள்முதல் செய்துள்ளார்கள்.2016 - 2017ஆம் ஆண்டு முதல் கொள்முதல் செய்ய ஆரம்பித்த மின்சாரவாரியம் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு வாங்குவது தற்போதுவரைதொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 25ஆயிரம்கோடி. இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான முன்னாள் மின்சாரத் துறைஅமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தற்போது உள்ள மின்சாரத் துறை அமைச்சர்தங்கமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்பதைஆதாரங்களுடன் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

பெரும்பாலான நிறுவனங்களால் 5 மாதத்திற்குள் மின்சாரம் தர இயலவில்லை. கிட்டத்தட்ட2 வருடங்கள் அவர்கள் மின்சாரம் தரவில்லை. அப்படி இருந்தும் ஒப்பந்தங்களை ரத்து செய்யாமல் கொள்முதல் செய்துள்ளார்கள்.2016 - 2017ஆம் ஆண்டு முதல் கொள்முதல் செய்ய ஆரம்பித்த மின்சாரவாரியம் சந்தை விலையைவிட கூடுதல் விலைக்கு வாங்குவது தற்போது வரை தொடர்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 25ஆயிரம்கோடி. இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான முன்னாள் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தற்போது உள்ள மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - என்பதைஆதாரங்களுடன் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

"தமிழக அரசு சட்ட விரோதமாக ஒப்பந்தங்கள் போட்டு தனியார்நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல்செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக" இந்த அமைப்பினர் குற்றம் சாட்டிஉள்ளார்கள். அமைச்சர் தங்கமணி மீதான ஊழல் புகார்கள் புதிதல்ல.* காற்றாலை மின்சார ஊழல்,* தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் ஊழல்,* தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல்,* மின் வாரியத்துக்கு உதிரி பாகங்கள் வாங்கு வதில் ஊழல் என்று பல்வேறுபுகார்கள் அவர் மீது குவிந்துள்ளது.சமீபத்தில் ஆளுநரைச் சந்தித்து தி.மு.க. சார்பில் ஊழல் பட்டியல்கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் மின்வாரியத்துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி,தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட950.26 கோடி ரூபாய் ஊழல் புகார் கொடுக்கப்பட்டது. இந்த ஊழலை மறைக்கவே தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டது என்று பொய் சொல்லி வருகிறார் தங்கமணி.தனியாரிடம் இருந்து 3580 மெகாவாட் மின்சாரத்தை கடன் வாங்குகிறதுதமிழக அரசு. எதற்காக வாங்குகிறார்கள்? அரசு மூலமாக தயாரிக்கும்முயற்சிகளை எதனால் எடுக்கவில்லை?அரசு தயாரித்தால் அதன் மூலம்தனக்கு என்ன லாபம் என்று யோசித்த தங்கமணி, தனியாரிடம்வாங்கினால்தான் கமிஷன் கிடைக்கும் என்று திட்டமிட்டு தனியாரிடம் இருந்துமின்சாரத்தை வாங்குகிறார்.

இதன் மூலமாக பல கோடி கைமாறுகிறது.இதற்காக தமிழக அரசின் மின் திட்டங்களை முடக்கவும் செய்கிறார்.தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால் அரசுப் பணம் விரையம் ஆகிறது. இன்னொரு பக்கம் அரசு மின் திட்டங்களும் வீணாகிறது. இதைவிட அரசுத் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது! தங்கமணி தமிழகத்துக்குச் செய்த மிக முக்கியமான துரோகம் - உதய் மின்திட்டத்தில் கையெழுத்து போட்டது ஆகும். 2015 ஆம் ஆண்டு உதய் மின்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் இணைய முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

ஆனால் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது டெல்லி சென்று அந்த திட்டத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வந்தவர் தான் அமைச்சர் தங்கமணி. தமிழகத்தின் உரிமையை மத்திய அரசிடம் அடகு வைத்தார்! மத்திய அரசு இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான வேலைகளை மறைமுகமாகச் செய்ய ஆரம்பித்துவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களும் -புதிய மின்சார சட்டமும் அமல் ஆனால் இதுதான் நடக்கும். இதைப் பற்றிக்கொஞ்சம் கூட முதலமைச்சர் பழனிசாமிக்கும் அக்கறை இல்லை. மின்சார அமைச்சர் தங்கமணிக்கும் இல்லை. இப்படி தொடர் துரோகமும் ஊழலும்தான் அ.தி.மு.க. ஆட்சி

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்