திமுகவுக்கு பெருகும் ஆதரவு!... மு.க.ஸ்டாலின் பக்கம் சாய்ந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி, வேல்முருகன் கட்சிகள் !

 


தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதித் தமிழர் பேரவை, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 25, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதித் தமிழர் பேரவை ஆதரவு தெரிவிக்கிறது.

234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்போம். வெற்றிக்கான பணிகளில் ஈடுபட்டு, அந்த வெற்றி கனியை தலைவர் ஸ்டாலினிடம் கொண்டு வந்து சேர்ப்போம்,என்றார்.

இதே போல்,அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய த முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளது. 

முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் அஜய், ஆதரவு கடிதத்தை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கொடுத்திருக்கிறார். இக்கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

 இந்நிலையில் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் திமுகவுக்கு தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்துள்ள நிலையில் ஓரிடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்