குமரி வழியே தொடரும் கனிமவள கடத்தல். 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை இருந்தும் கண்டுகொள்ளாத அவலம்

 கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடந்த பல வருடங்களாக பாறைகளை உடைத்து கேரளாவுக்கு கனிம வள கடத்தல் தொடர்ந்து நடந்து வந்தது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன் பலனாக குமரி மாவட்ட மலைப்பகுதிகளில் மட்டும் பாறைகளை உடைக்க தடைவிதிக்கப்பட்டது ஆனால் அப்பகுதியில் உள்ள கல்குவாரிகள் இயங்க மாவட்ட நிர்வாகம் கடந்த காலங்களிலேயே சிறப்பு அனுமதியும் வழங்கியது 

அதன் பலனாக அண்டை மாவட்டமான நெல்லை மாவட்டத்திலிருந்து பாறைகளை உடைத்து இங்கே கொண்டுவந்து சல்லி களாகவும் எம் ஸாண்டுகளாகவும் மாற்றி கேரளாவுக்கு தொடர்ந்து கனிமவள கடத்தல் நடந்துதான் வருகிறது. மட்டுமல்ல நெல்லை மாவட்டத்திலிருந்து குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு தினந்தோறும் பலநூறு கனரக லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கனிம வளத்துறை வட்டாரப் போக்குவரத்து துறை ஆகியவை கண்டுகொள்வது இல்லை 

இந்த லாரிகள் அனைத்தும் பாடி உயரத்தை செயற்கையாக அதிகரித்து அதிக பாரத்தை ஏற்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லுகின்றனர். குமரி மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக நிலத்தை சமன் படுத்தும் போது எஞ்சியிருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் போது தலையிட்டு வழக்குப் பதிவு செய்யும் வருவாய் துறையினர் மற்றும் கனிமவளத்துறை நா மேற்படி கனிமவள கடத்தல் லாரிகளை மட்டும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடையே வைக்கப்படுகிறது மட்டுமல்ல போக்குவரத்து விதிகளை மீறி குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் காரில் சீட் பெல்ட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணம் செய்தும் டெம்போ போன்ற இலகுரக வாகனங்களில் காய்கறிகள் உட்பட உணவு பொருட்கள் அதிக பாரம் ஏற்றி யதாக வழக்குப் பதிவு செய்யும் போலீசார் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கடைகளையும் சேர்க்கையாக பாடி உயரம் அதிகரித்துள்ளதையும் கண்டுகொள்ளாமல் வழியனுப்பி வைத்து வருவதாக குற்றச்சாட்டு 

சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு நாள் பத்திரிகைகளில் கனிம வள கடத்தல் லாரிகள் குறித்து செய்திகள் வந்தால் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஒரு சில நாட்கள் மட்டும் 1 அல்லது 2 கனரக லாரிகளை பிடித்து வழக்கு போடுவது அதோடு அதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இவற்றை எல்லாவற்றையும் விட கனிமவள கடத்தலுக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த மாவட்டத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் போராட்டம் நடத்தியது உண்டு அதன் பின்னர் அவர்களும் கண்டுகொள்வதில்லை என்ற நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட 6 சட்டமன்ற உறுப்பினர்களும் மேற்படி குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு கொண்டு செல்லும் கனிமவள கடத்தல் லாரிகளை குறைந்தபட்சம் தங்களது கட்சி தொண்டர்களின் துணையோடு கூட போராட்டம் என்ற பெயரில் சிறைபிடிக்க கூட இயலவில்லை. 

அதிக பாரம் ஏற்றிச் செல்வதை தடுக்க குறைந்தபட்சம் திடீர் சோதனை என்ற பெயரில் அந்த லாரிகளை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க இதுவரைக்கும் நடவடிக்கை எடுத்ததும் இல்லை. இதன் மூலம் பொதுமக்கள் சந்தேகப்பட்டு வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் திடுக்கிட வைக்கிறது சம்பந்தப்பட்ட கனிமவள கடத்தல் லாரி உரிமையாளர்களுக்கும் இவர்களுக்கு ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்று சந்தேகம் கொள்ளும் விதத்தில் பொதுமக்கள் பேசும் பேச்சுக்கள் பரபரப்பாக உள்ளது. குமரி மாவட்டத்திலிருந்து மற்றும் குமரி மாவட்டம் வழியே நடைபெறும் கனிமவள கடத்தலை தடுக்க இயலாத சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகம் காவல்துறை ஆகியவற்றில் நேர்மையானவர்கள் யாரும் இல்லையோ என்று சந்தேகப்படும் விதத்தில் தொடர்ந்து கனிமவள கடத்தல் குறிப்பாக செயற்கையாக பாடி உயரம் அதிகரித்து அதிக பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரி கள் தொடர்ந்து சிட்டாகப் பறந்து வருகிறது. 

தமிழகத்தின் கனிம வளத்தை காக்க பலரும் போராடி வரும் வேளையில் தாங்கள் தடுத்து விட்டதாக கூறி ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளை பொதுமக்கள் கோபத்துடன் பார்க்கும் படலம் அரங்கேறி வருகிறது என்றால் மிகையல்ல. தற்போதைய தேர்தல் காலத்தில் கூட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள லாரிகள் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு செல்வது தேர்தல் ஆணையத்துக்கு கூட தெரியவில்லை என பொதுமக்கள் கதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா