எம்.சி. சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஐடி ரெய்டு - 6 கோடி பறிமுதல்?

 


சென்னை மற்றும் தருமபுரியில் அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் என்பவருக்கு சொந்தமாக தருமபுரியில் உள்ள கல்வி மற்றும் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அவர்களுடன் தேர்தல் பறக்கும் படையினரும் சோதனையில் ஈடுபட்டனர். குமாரசாமிபேட்டையில் உள்ள பள்ளியில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் தருமபுரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்திலும் சோதனை நீடித்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.