இந்நிலையில், இந்த புதிய நடைமுறையை சிக்கலின்றி செயல்படுத்த ஏதுவாக, மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தபால் வாக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குச்சீட்டு வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தற்போது விளக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போடுக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தபால் வாக்குச் சீட்டுகளை வழங்குவது நாளை தொடங்கி, 5 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் சேகரிக்கப்பட்டு, பிரதான பெட்டியில் கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்க்கப்படும். தபால் வாக்கு அளிக்கும் வாக்காளர்களின் விவரம், தபால் வாக்குகளை வழங்கும் இடங்கள் மற்றும் தேதி குறித்த விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களின் சார்பில் ஒருவர் உடன் வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்கு பணிகளை மேற்கொள்ள 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினமும் 15 வாக்குச் சீட்டுகளைக் கொடுத்து, வாக்களித்த பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வர். வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பது, வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும். இக்குழு 2 முறை வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும். அவ்வாறு 2 முறை சென்றும், வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், அவர்கள் வாக்களிக்க இயலாது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வந்தும் அவர்கள் வாக்களிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சங்கர்லால் குமாவத், ஜெ.மேகநாதரெட்டி, பி.என்.தர், ஆல்பிஜான் வர்கீஸ், பி.ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


சென்னை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தவும், அந்த வாக்குச் சீட்டுகளை பெறவும் 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 16 தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே அந்த வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அவ்வாறு 7,300 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த புதிய நடைமுறையை சிக்கலின்றி செயல்படுத்த ஏதுவாக, மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தபால் வாக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் உயர் நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குச்சீட்டு வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தற்போது விளக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போடுக்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

தபால் வாக்குச் சீட்டுகளை வழங்குவது நாளை தொடங்கி, 5 முதல் 7 நாட்கள் வரை நடைபெறும். வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் சேகரிக்கப்பட்டு, பிரதான பெட்டியில் கொண்டு வந்து பாதுகாப்பாக சேர்க்கப்படும். தபால் வாக்கு அளிக்கும் வாக்காளர்களின் விவரம், தபால் வாக்குகளை வழங்கும் இடங்கள் மற்றும் தேதி குறித்த விவரங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. வேட்பாளர்களின் சார்பில் ஒருவர் உடன் வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்கு பணிகளை மேற்கொள்ள 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவும் தினமும் 15 வாக்குச் சீட்டுகளைக் கொடுத்து, வாக்களித்த பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்வர். வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிப்பது, வெளிப்படைத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்படும். இக்குழு 2 முறை வாக்காளர்களின் வீடுகளுக்கு செல்லும். அவ்வாறு 2 முறை சென்றும், வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், அவர்கள் வாக்களிக்க இயலாது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குச்சாவடிக்கு வந்தும் அவர்கள் வாக்களிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சங்கர்லால் குமாவத், ஜெ.மேகநாதரெட்டி, பி.என்.தர், ஆல்பிஜான் வர்கீஸ், பி.ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு