கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 


திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையொழுத்தாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. திமுக தனது பெரும்பான்மையான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை உறுதி செய்துவிட்டது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.


கொமதேக உடன் நடைபற்ற இரண்டுக்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே கொமதேக, அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியான நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் திமுக - கொமதேக கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தற்போது சுமூகமாக முடிந்துள்ளது. 

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திமுக உடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. 

கொமதேக-வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கி உள்ளனர். 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, திமுக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)