காங். தேர்தல் அறிக்கையில் 26 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் சென்னையில் தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டார்

 


காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி மாநில தலைவர் அழகிரி வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


  • தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை..

  • உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை..

  • கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சம உரிமை..

  • தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்..

  • மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி, மீனவர்கள் பழங்குடியின பிரிவில் சேர்க்க நடவடிக்கை..

  • 3 விவசாய சட்டங்களுக்கு பதிலாக தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாக்கும் புதிய சட்டங்கள்...

  • மாநில தகவல் ஆணையத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர நடவடிக்கை..

  • நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கை..

  • காவிரி நீர் மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு தன்னாட்சி அமைப்பாக செயல்பட நடவடிக்கை..

  • கிராம தொழில்களை ஊக்குவிக்க 25 சதவீத மானியத்துடன் கடன் வசதி..

  • முதியோர் ஓய்வுத்தொகையை உயர்த்தி, அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை..

  • குடும்ப தலைவராக முதியோர் இருந்தால் வீடு தேடி ரேசன் பொருட்கள் கொண்டு சென்று வழங்கப்படும்..

  • கோயில்களில் இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை..

  • சாதி மறுப்பு திருமணம் செய்தோர் ஆணவ படுகொலை செய்வதை தடுக்க நடவடிக்கை..

  • டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

  • பெண் கல்வியை ஊக்குவிக்க வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை..

  • மின் தேவையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றால் போல் புதிய மின் திட்டங்கள் துவங்க நடவடிக்கை..

  • மாதம் ஒரு முறை விசைத்தறியாளர்களுக்கு மின் கணக்கீடு எடுக்க நடவடிக்கை..

  • பணியின் போது பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை..

  • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)