மார்ச் 22 வரை மக்களவை ஒத்திவைப்பு..
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 15ஆம் தேதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.*
*இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மக்களவை கூடியது. வெள்ளிக் கிழமை மக்களவை நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் 22 வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.*