21,289 ரவுடிகள் மீது நடவடிக்கை: டிஜிபி ஜே.கே.திரிபாதி தகவல்

 


தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 ஆயிரத்து 289 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிஜிபிஜே.கே.திரிபாதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்றுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் 732 பேர்குண்டர் தடுப்பு சட்டத்தில்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 18,183 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் கீழ்வழக்குப்பதிவு செய்தும், நன்னடத்தை பிணைய பத்திரம் பெற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிடியாணையில் உள்ள14,343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரசு உரிமம் பெற்றதுப்பாக்கிகளில் 3,299 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 18,593 துப்பாக்கிகள் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 16 உரிமையில்லாத நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 75 கிலோ வெடிமருந்துப் பொருட்களும், திருப்பூர் மாவட்டத்தில் 150 கிலோவெடிமருந்தும், 890 டெட்டனேட்டர்களும், 786 ஜெலட்டின் குச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 375ஜெலட்டின் குச்சிகளும், 450 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 1,635 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினரால் 9,104வழக்குகள் பதிவு செய்யப்பட்டு9,095 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரச்சினைக்குரிய பகுதியாக 3,261 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, 3,188 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21,289 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)