திண்டுக்கல் சீனிவாசன், அடிப்படை வசதிகள் செய்து தவில்லை எனக் கூறி 2 இடங்களில் பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

 



திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 2வது முறையாக அதிமுக சார்பில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டிருக்கிறார். இவர், நேற்று முதல் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தாடிக்கொம்பு சாலையில் உள்ள 1வது வார்டுக்கு உட்பட்ட பாலதிருப்பதி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வருகைதந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாலை வசதி, கழிவுநீர் ஓடை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனக்கூறி பரப்புரைக்கு வருகைதந்த வனத்துறை அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான சீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உடனடியாக சீனிவாசன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அங்கிருந்த அதிமுகவினர் பெண்களை சமாதானம் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குகள் கேட்க வந்த சீனிவாசன், தற்போது தான் தங்களது பகுதிக்கு மீண்டும் வாக்குகள் கேட்க வந்துள்ளதாக தெரிவித்தனர். தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை கூறியபோது அதனை காதில் வாங்காமலும் உள்ளே வந்து பார்வையிடாமலும் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டினர்.

இதேபோல் அய்யங்குளம் பகுதியில் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களின் வீடுகளை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் கூறுவதாக கூறி வனத்துறை அமைச்சர் சீனிவாசனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து அவர்களை சீனிவாசன் சமாதானம் செய்தார் இந்த 2 முற்றுகை சம்பவம் அதிமுக வினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்