தேர்தலில் திமுக 190-க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளை ஒதுக்கியது.

விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. மதிமுக உதய சூரியன் சின்னத்தில் களம் காண்கிறது. மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. 

மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்திலும் களம் காண இருக்கிறது.

திமுக கூட்டணியில் இதுவரை 48 தொகுதிகள் தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

அதில் 41 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ள நிலையில், மனித நேய மக்கள் கட்சி, மதிமுக உடன் சேர்த்து திமுக 190க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதே போல், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை திமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)