திமுக வேட்பாளர்கள் பட்டியலில் 15-க்கும் மேற்பட்ட அரசியல் வாரிசுகள் - யாருக்கெல்லாம் வாய்ப்பு?

 


பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன், பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ், தங்கபாண்டியன் மகன் தென்னரசு ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 15-க்கும் மேற்பட்டோர் அரசியல் வாரிசுகளாக உள்ளனர்.

அரசியலில் வாரிசு என்பது சாதாரணமாக மாறிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் மகன். மேலும், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா,ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் ஆகியோரும் தேர்தல் களம் காண்கின்றனர்.

பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன், பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ், தங்கபாண்டியன் மகன் தென்னரசு ஆகியோர் களமிறங்குகின்றனர்.

இதேபோல, ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை, பெரியசாமியின் மகள் கீதா ஜீவன், நாகநாதன் மகன் மருத்துவர் எழிலன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன், காதர்பாட்சாவின் மகன் முத்துராமலிங்கம், அண்மையில் மறைந்த ஜெ.அன்பழகனின் தம்பி கருணாநிதி, கே.பி.பி.சாமியின் தம்பி சங்கர், பெரியண்ணன் மகன் இன்பசேகரன், காஞ்சிபுரம் அண்ணாமலையின் பேரன் எழிலரசன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்