எனக்கு 100 கோடி பத்தாது.. கமல்ஹாசன் பேச்சு
தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அவரது இரண்டாம் கட்ட பரப்புரையை சென்னையில் நேற்று (03.03.2021) தொடங்கினார். நேற்று மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஒரு கட்சி என்னிடம் 100 கோடி பேரம் பேசியது. பேரம் பேசியதையே என்னுடைய ‘தசாவதாரம்’ படத்தில் வசனமாக வைத்தேன். அப்போது நான் ஆசைப்படவில்லை, இப்போதும் ஆசைப்பட மாட்டேன். எனக்கு நூறு கோடி பத்தாது. எனக்கு 5.7 லட்சம் கோடி தேவை. ஏழரைக் கோடித் தமிழர்களின் தேவை அதுதான்.
என் தேவைக்கு இதோ வாட்ச் இருக்கிறது. காரில் வந்தேன், என்ன நீங்க ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறீர்கள் என்கிறார்கள். நான் ஏரோபிளேனில் கூட வருவேன். 34 நாள்தான் இருக்கிறது.
நான் என் மக்களைச் சென்றடைய வேண்டும்.நீ என்ன கேலி வேண்டுமானாலும் பேசு. எப்படி பேட்டிங் செய்தேன் என்றெல்லாம் சொல்லாதே, பந்து எங்கே போகிறது என்று மட்டும் பாருங்க.” என்றார்.