விவசாய சங்க தலைவருக்கும் - போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

 


கடலூர் அருகே காட்டுமன்னார்கோவிலில், தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலம், வீடுகளை காலி செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய விவசாய சங்க தலைவருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

காட்டுமன்னார்கோவிலில் நெடுஞ்சாலை அமைக்க, கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கிய நிலையில், வீடுகளை காலிசெய்ய கூடுதல் அவகாசம் கேட்டு மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கு ஆதரவாக பேசிய விவசாய சங்கத்தலைவர் இளங்கீரனுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் இளங்கீரனை போலீசார் தாக்கி இழுத்துச் சென்றனர்.