மாநிலம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றிக் அரசு மற்றும் தனியார் குளிர்வசதிப் பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்காக இயக்கும் பேருந்துகளிலும், பள்ளி கல்லூரிகள் மாணவர்களுக்காக இயக்கும் பேருந்துகளிலும் குளிர்வசதியைப் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்வசதிப் பேருந்துகளில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும் எனவும், 50 விழுக்காட்டுக்கு மேல் புதிய காற்றுச் சுழற்சி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நோயுற்றோர், 65 வயதுக்கு மேற்பட்டோரைக் குளிர்வசதிப் பேருந்தில் ஏற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.