ஹைதராபாத்தில் மருத்துவ மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை..பெற்றோரை ஏமாற்ற நாடகமாடியது விசாரணையில் அம்பலம்..!
ஹைதராபாத்தில் 19 வயதான மருத்துவக் கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
3 நாட்களுக்கு முன் தம்மை ஆட்டோ ஓட்டுனர் உள்பட 4 பேர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக அந்த மாணவி கூறியிருந்தார். ஆனால் கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது அது போலியான புகார் என்று கண்டுபிடித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக தமது பெற்றோரை ஏமாற்றி வீட்டை விட்டுச் செல்வதற்காக இவ்வாறு நாடகமாடியதாக அந்தப் பெண் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் இறங்கியதால் பயத்தில் அவர் கதை அளந்து விட்டிருப்பதும் அம்பலமானது.