கட்டணமில்லா பேருந்து சேவை: டோக்கன்கள் நாளை முதல் விநியோகம் என அறிவிப்பு!

 


மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் வரும் 15ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் மாநகர் போக்குவரத்தக் கழகம் அறிவித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகருக்குட்பட்ட தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் வந்து இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன்களை அருகில் உள்ள பணிமனைகளில் பெற்றுக் கொள்ளுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.


என்ன தேவை?


சென்னை மாநகர் போக்குவரத்து கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவடைந்ததற்கான சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றை மாநகர் போக்குவரத்து கழகப் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் காட்டி மாதம் 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு தேவையான டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.

அலுவலக நாட்களில் காலை 8 மணி முதல் தொடங்கி இரவு 7.30 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் இடங்கள்:

பணிமனைகள்:

அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதை, மத்திய பணிமனை, குரோம்பேட்டை - 1, ஆலந்தூர், அய்யப்பந்தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, அயனாவரம், தண்டையார் பேட்டை -1, எண்ணூர், வியாசர்பாடி, மாதவரம், பாடியநல்லூர்

பேருந்து நிலையங்கள்:செண்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, பல்லாவரம், தாம்பரம் மெப்ஸ், கிண்டி எஸ்டேட், பூந்தமல்லி, வேளச்சேரி, கோயம்பேடு, அம்பத்தூர் ஓடி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவொற்றியூர், சுங்கச்சாவடி, வள்ளலார் நகர், எம்.கே.பி நகர், செங்குன்றம், செம்மஞ்சேரி, சைதை, பெசண்ட் நகர்.

Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image