முகநூலில் கல்லூரி மாணவியுடன் பழகி ஆபாச படம் அனுப்ப சொல்லி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

 


சென்னை கூவத்தூர் காரன்குப்பத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் கார்த்திக். 12ஆம் வகுப்பு வரை படித்த இவர் பல்வேறு பகுதிகளில் சமையல் வேலை செய்து வருகிறார். முகநூலில் இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியுடன் நட்பாக பழகி உள்ளார். 

இந்த நட்பு காதலாக மாறியதை தொடர்ந்து அந்த மாணவி குளிக்கும் வீடியோ காட்சிகளை தனது செல்போனுக்கு அனுப்ப சொல்லி பதிவு செய்து கொண்டார். அதைக் காட்டி படிப்பு செலவுக்கு பணம் தேவை என இரண்டு முறை 5,000 ரூபாயை வாங்கி உள்ளார்.

அதன்பிறகு 10,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளார். இதனை தர மறுத்த அந்த மாணவி தந்தையிடம் புகார் கூறியுள்ளார். இதனை கேள்விப்பட்ட கார்த்திக் உடனடியாக அவரது தந்தைக்கு போன் செய்து 50, 000 ரூபாய் தரவில்லை என்றால் மகளின் ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதன் காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் பரிந்துரையின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது கார்த்திக்கின் முகநூல் மற்றும் செல்போன் எண்ணை கொண்டு அவர் கூவத்தூரில் இருப்பதை அறிந்து அங்கு சென்று கைது செய்தனர். 

பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, இவர் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் முகநூலில் பழகி ஆபாச படங்களை பெற்று மிரட்டி பல ஆயிரம் ரூபாய் பறித்து இருப்பது தெரியவந்துள்ளது. 

அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் தெரிவித்தால் அதற்கும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)