சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஜெயந்த் முரளி நியமனம்


 சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் புகாரில் சிக்கியதால் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி பதவியும் தரமிறக்கப்பட்டு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி ஜெயந்த் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி, டிஜிபி பதவியில் முதன்மையானது. ஒட்டுமொத்தக் காவல்துறைக்கு டிஜிபி சட்டம்- ஒழுங்கு தலைமையும், மண்டல ஐஜிக்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பில் கூடுதல் டிஜிபி (சட்டம்- ஒழுங்கு) இருப்பார். இது ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவுமிக்க ஒரு பதவி ஆகும்.


சட்டம்- ஒழுங்கு டிஜிபிக்கு இணையாக குற்றப்பிரிவு டிஜிபி, உளவுத்துறை டிஜிபி என எந்தப் பதவியையும் உருவாக்கி சட்டம்- ஒழுங்கு டிஜிபியின் பணியில் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி பதவியைத் தரம் உயர்த்தி புதிதாக சிறப்பு சட்டம்- ஒழுங்கு டிஜிபி என்கிற பதவி சமீபத்தில் உருவாக்கப்பட்டது. அதன் பொறுப்பில் ராஜேஷ் தாஸ் இருந்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)