ஹாட் லீக்ஸ்: தடுத்தாலும் அரசியல் ‘மைலேஜ்’
சசிகலா விடுதலையாகி வருகிறார் என்றதும் ஜெயலலிதா நினைவிடத்தை அவசர அவசரமாய் திறந்து, அடுத்த சில நாட்களில் ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்று சொல்லி அதைவிட அவசரமாய் பூட்டுப் போட்டார்கள்.
இதனால் சென்னை திரும்பிய சசிகலா அக்கா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. இந்நிலையில், பிப்ரவரி 24 ஜெயலலிதா பிறந்த நாளுக்காக அவரது நினைவிடம் நிச்சயம் திறக்கப்படும் என்கிறார்கள். அப்படித் திறக்கப்பட்டால், சசிகலாவும் அங்கு செல்லத் தயாராய் இருக்கிறாராம்.
ஒருவேளை, அவரை அங்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினால், அதை வைத்தே அரசியல் மைலேஜ் எடுக்கவும் தயாராய் இருக்கிறதாம் சசிகலா தரப்பு.