கோவில் யானையை சரமாரியாக தாக்கிய பாகன்கள்: கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானையை தாக்கிய பாகன் மற்றும் உதவி பாகன் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யாதாவை யானை பாகன் வினில்குமார், உதவியாளர் சிவபிரசாத், ஆகியோர் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். திருச்செந்தூர் கோவில் யானை உதவியாளர் சுப்பிரமணியம் கண்காணிப்பில் உள்ள இந்த யானையை வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் 2வது நாளாக இன்றும் பரிசோதிக்க உள்ளனர்.