புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவு என தகவல்
புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி துணை நிலை ஆளுநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்காததால் கவிழ்ந்தது. இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகளை முழுமையாக வீடியோவில் பதிவு செய்து சட்டசபை செயலர் துணை நிலை ஆளுநருக்கு அறிக்கை அனுப்பிஉள்ளார்.
இதன் மூலம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை அறிக்கை அனுப்புவார் என்றும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.