கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநர்… ஆடைகளையும் அபகரித்துச் சென்ற கொடூரம்

 


ஹைதராபாத்தில் ஆட்டோவில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆடைகளையும் அபகரித்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோவில் பயணித்துள்ளார்.

ஆட்டோ கட்கேசர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர், அந்த மாணவியை புதருக்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆடைகளையும் அபகரித்து சென்றுள்ளார்.

அந்த மாணவி செய்வதறியாது புலம்பிக்கொண்டிருந்தை பார்த்த அப்பகுதி பெண்கள், மாணவிக்கு ஆடைகளை வழங்கியதோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தப்பிச்சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா