மயானத்திற்கு செல்வதற்கான பாதை அடைக்கப்பட்டதால் உறவினர்கள் போராட்டம்


திருப்பத்தூரில் மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் தடுப்பணையில் இறங்கி உறவினர்கள் உடலை சுமந்து சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

அத்திக்குப்பத்தில் மயானம் செல்வதற்கான பாதை அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் இறந்த ஒருவரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய முற்பட்ட போது பாதை இல்லாததை கண்டித்து சாலையில் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்து வந்த அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்கள், தடுப்பணை வழியாக, கழுத்தளவு தண்ணீருக்குள் இறங்கி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.