பாமகவுடன் கூட்டணி - அதிமுக ஆலோசனை..!

 


வன்னியர் தனி இட ஒதுக்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக, பாமக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் தங்கமணி இல்லத்தில், பாமக குழுவினர், இன்று காலை 10.30 மணியளவில், ஆலோசனை மேற்கொண்டனர்.

பகல் 1.30 மணி வரை நீடித்த இந்த ஆலோசனையில், அதிமுக சார்பில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அடங்கிய அதிமுக குழுவினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர்கள் குழுவினர் சந்தித்துப் பேசினர்.