வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்

 


தமிழகத்தில் முதலாவது முறையாக வாக்களிப்பவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக வழங்க, அஞ்சல் துறையுடன் 5 ஆண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது 21 லட்சத்து 39 ஆயிரத்து 395 முதல் முறை வாக்காளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு வண்ண வாக்காளர் அட்டை, இலவசமாக அஞ்சல் துறைமூலம் விரைவு அஞ்சலில் வீடுகளுக்கே அனுப்பி வைக்கப்படும். இதற்காக 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதல்முறை வாக்காளர்கள் இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை பெற முடியும். வெளி மாநிலத்தவர்களுக்கும் இதேபோன்று அடையாள அட்டை வழங்கும் திட்டம் உள்ளது. அவர்கள் விண்ணப்பிக்கும்போது உரிய கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், வரும் பிப்.10-ம் தேதி சென்னை வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.