எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டார்.

 


சென்னை: ''விவசாயிகள் கடன் தள்ளுபடி அறிவிப்பை, 'போஸ்டர்' அடித்து, அனைத்து ஊர்களிலும் ஒட்டுங்கள்,'' என, எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் பழனிசாமி., உத்தரவிட்டார்.

சட்டசபையில் நேற்று பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நன்றி தெரிவித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வரிசையாக, முதல்வரின் இருக்கைக்கு சென்று நன்றி கூறினர். பெண் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர், முதல்வரின் கால்களை தொட்டு வணங்கினர். சட்டசபை கூட்டம் முடிந்த பின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், முதல்வர் மற்றும் துணை முதல்வரை சூழ்ந்து, நன்றி தெரிவித்தனர்.

அவர்களிடம் உற்சாகமாக பேசிய முதல்வர், ''விவசாய பயிர் கடன் தள்ளுபடி விபரத்தை, 'போஸ்டர்' அடித்து, அனைத்து பகுதிகளிலும் ஒட்டுங்கள். அரசின் சாதனைகளை, மக்களிடம் தெரியப்படுத்துங்கள். அனைவரும் அவரவர் பகுதிகளில், தேர்தல் பணியை செய்யுங்கள்; மற்றதை, நான் பார்த்துக் கொள்கிறேன்,'' என்றார்.

Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
காவேரிப்பாக்கத்தில் இந்து முன்னணி ஆட்டோ ஓட்டுனர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை
Image