கிருஷ்ணகிரி மாவட்டம் பத்து ரூபாய் இயக்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்


 இன்று 20.02.2021ல் மத்தூர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெறும் ஊழலை வெளிக்கொண்டு வர தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு செய்த இயக்கத்தின் நிர்வாகிகளை ஊராட்சி மன்ற தலைவர்களின் கணவன்மார்கள்,ஊராட்சி செயலாலர் அடியாட்களை வைத்துகொண்டு மிரட்டுவது,கட்டபஞ்சாயத்து செய்வது, கொலைமிரட்டல் விடுப்பது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்க இயக்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாலரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான G. கோவிந்தராஜ்,ஆலோசனை வழங்கினார்.மாவட்ட செயலாலர் L. சக்கரவர்த்தி,மாவட்ட பொருளாளர் M. முரளிஆகியோர் கலந்துகொண்டு இயக்க நிர்வாகிகளுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மனு எப்படி அளிப்பது, மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அளவில்,ஊராட்சி அளவில் நிர்வாகிகளை நியமனம் செய்வது போன்ற ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள் இதில் மத்தூர் ஒன்றிய ஒருங்கினைப்பாளர் V. திருமூர்த்தி,ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் A. மணி,மத்தூர் ஒன்றிய செயலாலர் P.C. பரமசிவம்,ஒன்றிய விவசாய அணிச் செயலாலர் துரை,கிருஷ்ணகிரி ஒன்றிய துணைச்செயலாலர் மாது,குண்டலபட்டி ஊராட்சி செயலாலர் முருகன்,மற்றும் ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)