பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவைக்கு பதாகையுடன் சைக்கிளில் வந்தார் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி

 


கடந்த 2ம் தேதி இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்தநிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (23.02.2021) காலை மீண்டும் கூடியது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கடந்த இரண்டுமுறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது போல், இன்று நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெறுகிறது. அப்போது துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  

இதனிடையே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயவுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்களது எதிர்ப்பை போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வகையில் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. சட்டப்பேரவைக்கு சைக்களில் சென்றார். விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சைக்கிளில் பதாகை ஒன்றையும் கட்டியிருந்தார். எம்எல்ஏ ஒருவர் தமிழக சட்டப்பேரவைக்குக் கண்டன பதாகையுடன் சைக்கிளில் வந்ததை, சட்டப்பேரவைக்குச் செல்லும் வழியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். சட்டப்பேரவைக்கு வந்திருந்த ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களும் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது தமிமுன் அன்சாரியின் செயல்.  

Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image