திருமாங்கல்யத்திற்கு தங்க நாணயம் வழங்குவதை துவக்கி வைத்தார் முதலமைச்சர்

 


திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகளுக்கு 726 கோடி ரூபாய் நிதியுதவி, திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயங்கள் வழங்குவதை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை சைதாப்பேட்டையில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு தகவல் ஆணையக் கட்டடத்தை திறந்துவைத்தார்.

சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயிலின் திருக்குளத்திற்கு மதிற்சுவர், நாகூர் தர்காகுளத்தின் நான்குபுறத் தடுப்புச் சுவர் புதுப்பித்துக் கட்டப்படும் பணி ஆகியவற்றிற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.