புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

 


புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவி வகித்தபோது அரசு துறைகளில் பணியாற்றிய ஊழியர்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்தனர்.

செலவீனங்கள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்களில் பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களில் வட மாநிலத்தை சேர்ந்த 3 ஊழியர்களை மட்டும் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து கிரண்பேடி பணி நிரந்தரம் செய்தார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அந்த 3 பேர் உட்பட 8 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் துணைநிலை ஆளுநரின் அலுவலக சிறப்பு அதிகாரியாக பதவி நீட்டிப்பில் இருந்த தேவநிதிதாஸ் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அந்தப் பொறுப்புக்கு மலர்வண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரியாக பாலசந்தர், மக்கள் தொடர்பு அதிகாரியாக கணபதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.