இது என்னடா போலீசுக்கு வந்த சோதனை....சப் இன்ஸ்பெக்டரிடமே செல்போனை திருடிய மர்மநபர்கள்!
திருவள்ளூரில் பணிமுடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டரிடம் செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மாங்காடு காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் தனசேகர் பணிமுடிந்து போரூரை அடுத்த ஐயப்பன்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது சட்டைப் பையிலிருந்த கைபேசியை லாவகமாக திருடிவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
விரட்டியும் பிடிக்க முடியாத திருடர்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.