தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பு மகனை கொன்ற தாய்..! கதையை முடித்த திருமண போதை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே 36 வயதாகியும் திருமணமாகாத ஏக்கத்தில் தெருவில் செல்லும் பெண்களிடம் போதையில் வம்பு செய்த மகனை , பெற்ற தாயே தெருவில் வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளைஞர் போதைக்கு அடிமையானதால் நிகழ்ந்த விபரீதம் 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி குப்பாயி. இவருக்கு மூன்று மகன்கள் ஒரு ஒருமகள் இருந்தனர். மூத்த மகன் பாக்கியராஜ் திருமணம் ஆகி திருப்பூரில் வசித்து வரும் நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகள் இறந்துவிட்டார்.

இரண்டாவது மகன் பாஸ்கருக்கு 36 வயதான நிலையில் திருமணம் ஆகாத எக்கத்தில் மது போதையில் தெருவில் செல்லும் பெண்களிடம் வம்பிழுப்பதை வாடிக்கையாக்கியுள்ளான்.

இதனால் தங்கள் குடும்ப கவுரவம் பாதிப்பதாக கருதிய தாய் குப்பாயி பலமுறை கண்டித்தும் பாஸ்கர் சொல்பேச்சு கேளாமல் தொடர்ந்து அடாவடி செய்து வந்ததாக கூறப்படுகின்றது.

செவ்வாய்கிழமை இரவும் குடித்துவிட்டு வந்த பாஸ்கர் தனது தாய் குப்பாயி, தம்பி பிரபாகரன் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார்.

வீதியில் வைத்து பாஸ்கர் செய்த சேட்டைகளை கண்டு ஆவேசம் அடைந்த குப்பாயி தனது இளைய மகன் உதவியுடன் பாஸ்கரை கயிற்றால் கட்டி தூக்கி போட்டு மிதித்துள்ளார்

அப்படி இருந்தும் போதையால் அடங்க மறுத்து அலப்பறை செய்த பாஸ்கரை, இரும்பு கம்பியால் குப்பாயியும், இளைய மகன் பிரபாகரனும் சேர்ந்து கடுமையாக தாக்கி வீட்டிற்குள் இழுத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு அமைதியாக இருந்துள்ளனர்.

புதன்கிழமை காலை பாஸ்கர் உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக கூறி எதுவும் அறியாதவர்கள் போல அழுதுகொண்டே இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


பாஸ்கரை குடும்பத்தினரே அடித்துக் கொன்று விட்டதாக ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு ரகசியமாக ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பாஸ்கரனின் சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிணகூறாய்வுக்காக்கு எடுத்துச் சென்றனர் .

சம்பவம் குறித்து 65 வயது தாய் குப்பாயி தம்பி பிரபாகரன் ஆகிய இருவரிடமும் தொடர்ந்து சேத்தியாதோப்பு டிஎஸ்பி சுந்தரம் விசாரணை மேற்கொண்ட நிலையில் இருவரும் நடந்த சம்பவத்தை மறைக்க முயன்றதாக கூறப்படுகின்றது.

உடனடியாக குடியிருப்பு பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாஸ்கரை தாய் குப்பாயி தம்பி பிரபாகரன் கொடூரமாக தாக்கி இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனடிப்படையில் இவர்கள் மீது ஸ்ரீமுஷ்ணம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தாய் குப்பாயி மற்றும் தம்பி பிரபாகரனை கைது செய்தனர்.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்ய தவறினால், போதைக்கு அடிமையாகும் மகன்களால் என்னமாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்தச் சம்பவம்..!
Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image