கருவறையில் விஜயேந்திரர் பூஜை செய்ய அனுமதி மறுப்பு : வடமாநிலப் புரோகிதர்களுடன் தமிழ்ப் புரோகிதர்கள் வாக்குவாதம்

 


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறையில் வழிபாடு நடத்தக் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வடமாநிலப் புரோகிதர்களுடன் தமிழ்ப் புரோகிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த விஜேயந்திரருக்குப் பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

கோவில் கருவறைக்குள் பூஜை செய்ய விஜயேந்திரரை வடமாநிலப் புரோகிதர்கள் அனுமதிக்காததால் அவர்களுடன் தமிழ்ப் புரோகிதர்கள் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பேச்சு நடத்தியபின் கருவறையில் பூஜை செய்ய சங்கராச்சாரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தீபாராதனைக்குப் பின் அபிஷேகத்தை விஜயேந்திரர் மட்டுமே பார்க்க வேண்டும், மக்கள் பார்க்கக் கூடாது எனக் கூறித் திரை போட்டு மறைத்தனர்.

கோவில் நிர்வாகம் எச்சரித்த பின் அபிஷேகத்தைப் பக்தர்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு