மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

 


சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளோடு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கபட்டுள்ள நிலையில், அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள், தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.