மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சேலம் வருகை... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

 


சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தமிழகத்தில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில், "தாமரை இளைஞர்கள் சங்கமம்" என்ற பெயரில் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.

இதற்காக, டெல்லியில் இருந்து, தனி விமானம் மூலம் பிற்பகல் 1.45க்கு, சேலம், காமலாபுரம் விமான நிலையத்தை வந்தடைகிறார். பின்னர், தனியார் விடுதியில் சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பின் மாலை 4 மணிக்கு விழா மேடைக்கு வருகிறார். மேலும், ராஜ்நாத் வருகை ஒட்டி, காமலாபுரம் விமான நிலையத்தில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)