திருவாரூர்: அதிமுக கவுன்சிலர் தலைதுண்டித்து கொலை

 


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலரை படுகொலை செய்த கும்பல், தலை வேறு உடல் வேறாக வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ், கடந்த உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றிபெற்று பிறகு அதிமுகவில் இணைந்தார். அதிமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்த இவர், இன்று காலை 7.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து முத்துப்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

ஆலங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை அருகே மறைந்திருந்த கும்பல், ராஜேஷை ஆயுதங்களுடன் விரட்டிச் சென்று, சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளது. பின்னர் அவரது தலையை துண்டித்து எடுத்துச் சென்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் வீசி சென்றுள்ளனர்.