திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு

 


மிழக சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீசையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டப்பேரவைக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது.

இதையடுத்து, உரிமைக்குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அவை உரிமை குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்