தமிழ்நாடுமனித உரிமை ஆணைய உத்தரவுகள் அரசைக் கட்டுப்படுத்தும்: சென்னை உயர் நீதிமன்றம்

 


சென்னை: மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுகள் மாநில அரசைக் கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனிதஉரிமைகள்ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசின் பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும், மனித உரிமைகள் ஆணையத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதோடு, மனித உரிமைகள் ஆணைய உத்தரவுகளை அரசு அமல்படுத்தவில்லை என்றால்  மனித உரிமைகள் ஆணையமே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை, மனித உரிமைகள் ஆணையம் பிறப்பிக்கும்  உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என்றால், எதிர்மனுதாரர் அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள்தான் நீதிமன்றத்தை நாடும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.