பணம் பறிப்பதற்காக கடைகளை அகற்ற முயன்ற அதிமுகவினர், மாநகராட்சி ஊழியர்கள்: திநகர் வியாபாரிகள் குற்றச்சாட்டு

 


சென்னை தியாகராய நகரில் சாலையோரமாக 40 வருடங்களுக்கு மேலாக சிறிய கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சிலரும் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் சேர்ந்து நீதிமன்றம் அனுமதி வழங்கிய கடைகளை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக புதிதாக வெளி நபர்கள் சிலரை தியாகராய நகர் பகுதிக்கு வரவழைத்து இரவோடு இரவாக தற்காலிகமாக தடை போட வைத்துள்ளனர்.

 இதனால் முன்பு வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கும் புதிதாக கடை அமைத்து அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 குறிப்பாக இந்த அப்புறப்படுத்தும் செயலானது வியாபாரிகளிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு மாம்பலம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாகவும் சிறிது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)