நான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா

 


பெங்களூருவில் நான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின், சசிகலா இன்று அதிகாலை சென்னை திரும்பினார்.சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, பெங்களூரு விடுதியில் இருந்து நேற்று காலை புறப்பட்டார்.

கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு முழுவதும் பயணம் செய்த சசிகலா, இன்று அதிகாலை ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் சசிகலாவுக்கு ஏராளமானோர் வரவேற்பு அளித்தனர். இதனிடையே, சென்னை எல்லையான பழஞ்சூரில், சசிகலாவுக்கு பின்னால் வந்த வாகனங்களை போலீசார் இரும்பு தகடுகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.