யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நீதிமன்றம் கேள்வி!
தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை எட்டு வாரத்திற்குள் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய யானைகளை பல ஆண்டுகளாக பாகன்கள் ஸ்ரீதரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், முறையான காரணங்கள் இல்லாமல் பாகன்கள் இருவரும் வெளியேற்றப்பட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான காரணங்கள் இல்லாமல் பாகன்களை மாற்றியதால் யானைகளின் உடல்நிலை பாதிக்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்தார்.
எனவே பாதிக்கப்பட்ட யானைகளைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட தலைமை நீதிபதி, சமீக காலமாக யானைகள் சித்திரவதை படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.

மேலும், மேட்டுப்பாளையம் முகாமில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் யானைகள் சித்திரவதை படுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இது போன்று யானைகளை சித்திரவதை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடனர். விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்டக் கூடாது என தெரிவித்த நீதிபதிகள் தனியாரல் வளர்க்கப்படும் யானைகளை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாக பராமரிக்கப்படும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுத்து எட்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.