சென்னை தலைமைச் செயலகம் முற்றுகை... போலீசார் குவிப்பு!

 



சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 முன்னதாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தைத் தொடர்ந்த அரசு ஊழியர்கள் சங்கத்தினர், திடீரென தலைமைச் செயலகம் வந்து முதல்வரை சந்தித்து இதுதொடர்பாக மனுகொடுக்க முயன்றனர். 

அங்கு முதல்வர் இல்லை என்பதால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

உடனே அங்குவந்த பாதுகாப்பு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் களைய சொன்ன நிலையில், ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்பிறகு போராட்டம் நடத்திய ஊழியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு மேலும் அதிகப்படியான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)