‘சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும்’ என தகவல்

 


சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும்; எதிரிகளின் நெஞ்சம் பதறும்படி விசுவரூபம் எடுப்பார் என்று  நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் வெளியாகி இருக்கும், ‘அவதூறுகளுக்கு இனி துளியும் இடமில்லை’ என்ற கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் “துரோகிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்; நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். கழகம் வலிமையோடும் பொலிவோடும் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கெண்டோர் சத்திய அரசியலில்தான் ஈடுபடுவார்கள்; சந்தர்ப்பவாத அரசியலில் அல்ல, சூதும்-சூழ்ச்சியும் கவ்வியுள்ள அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.” என்று குற்பிடப்பட்டுள்ளது.


மேலும், “சுயலாபத்திற்காக, இயக்கம் சிதறுண்டு போவதை சசிகலா ஒருகாலும் ஏற்க மாட்டார்” என்றும், “தொண்டர்களை காத்திட, எந்த தொல்லையையும் எதிர்த்து எதிர் நீச்சல்போட துணிவான முடிவோடு தீவிர அரசியலில் ஈடுபட திடமான உறுதியான முடிவை எடுத்துவிட்டார்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுரவேகம் எடுக்கும் என்றும், கழகம் புத்தெழுச்சி பெறும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் களம் புகுவோம். எழுச்சியோடு களப்பணி ஆற்றுவோம்; ‘புறப்படுங்கள் புறநாநூற்று படைகளே தேர்தல் களம் நோக்கி’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’, எதிரிகளின் நெஞ்சம் பதறும்படி சசிகலா விசுவரூபம் எடுப்பார். துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை, இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்