சூடுபிடித்த பிசினஸ்.. வீட்டில் பீர் தயாரித்த பெண் கைது

 


சென்னை திருவெற்றியூரில் வீட்டில் கேரட் பீர் தயாரித்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.


திருவெற்றியூர் குப்பம் அருகே ஜெஜெ நகர் பகுதியில் வீட்டில் மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவெற்றியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்து மேரி என்ற பெண்மணியை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு அதிலிருந்து வீட்டில் தயாரித்து வருவதாகவும் இதுவரை நான்கு முறை சிறை சென்று விட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இதுபோன்று வீட்டில் மதுபானங்கள் தயாரித்து வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்