பெயரை மாற்றிய வழக்கு; நான் எங்கும் தலைமறைவு ஆகவில்லை: கராத்தே தியாகராஜன் விளக்கம்


 கராத்தே சங்கத்தின் பெயரை மாற்றியதில் முறைகேடு செய்ததாக கராத்தே தியாகராஜன் மீதுமும்பை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய கராத்தே பெடரேஷன்(AIKF) என்ற அமைப்பை, கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா(KAI) என்று பெயர் மாற்றம் செய்ததில் முறைகேடு நடந்ததாக ஜார்க்கண்டை சேர்ந்தகராத்தே மாஸ்டர் நஞ்சி பிரசாத்என்பவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

அந்த புகாரில், கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் கராத்தே தியாகராஜன், பொதுச் செயலாளர் பரத் சர்மா, நிர்வாகி விராப் வாத்சா ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

புகாரின்பேரில் விசாரணை நடத்திய மும்பை போலீஸார், இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பரத் சர்மா என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து, டெல்லி ஹரி நகர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த விராப் வாத்சா, போலீஸ் தேடுவதை அறிந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த கராத்தே தியாகராஜனை கைது செய்வதற்காக மும்பை போலீஸார் சென்னை வந்திருப்பதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுகுறித்து கராத்தே தியாகராஜனை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:

நான் சென்னையில்தான் இருக்கிறேன். விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் வரவேற்புநிகழ்ச்சியில்கூட கலந்துகொண் டேன். என்னைத் தேடி மும்பை போலீஸார் வரவில்லை. நான் தலைமறைவாகவும் இல்லை.

அகில இந்திய கராத்தே பெடரேஷன் என்ற அமைப்பை, கராத்தேஅசோசியேசன் ஆப் இந்தியாஎன பெயர் மாற்றம் செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை.

கராத்தே அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்புக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்தியன் ஒலிம்பிக் அசோசியேசன், உலக கராத்தே பெடரேஷன் போன்றவை அங்கீகாரம் கொடுத்துள்ளன.

பெயர் மாற்றம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் புதிதாக பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். இதை சட்டப் படி எதிர்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்